Saturday 31 May, 2008

மஞ்சள் பூக்களின் வாசத்துடன்...




அபூர்பமாய் தரிசித்த
அதிகாலை பனியின்
சாலையோர மரங்களோடு நான்..
இரவெல்லாம் உதிர்த்த
மஞ்சள் பூக்களின் வாசம்
அந்த இடத்தை
நிறைத்துக்கொண்டு
அங்காங்கே காத்திருக்கும்
சாலையோர இருக்கைகளிலும்
பாதையெங்கும் படர்ந்திருக்கும் பூக்களை
மிதிக்காமல்
தாண்டிச் செல்லும் மனது

சின்ன குருவிகளின் சந்தோச பாஷையில்
மழை முன்னறிவிப்பு செய்ய
தூறல் சாரளில்..மனது
குழந்தையாய் மாறி குதுகளிக்கும்
அக்கப்பக்க பார்வைகளில்
பொல்லாத நாகரீகம் தடை போட்டு
கமுக்கமாய் பல்லிலிக்கும்
மனமின்றி கிளம்புகையில்
இன்னும் மஞ்சள் பூவும்
மண் வாசனையும்
துரத்தியபடி.......

8 comments:

Divya said...

\\மனதுகுழந்தையாய் மாறி குதுகளிக்கும்அக்கப்பக்க பார்வைகளில்பொல்லாத நாகரீகம் தடை போட்டுகமுக்கமாய் பல்லிலிக்கும்\\

ரசித்த வரிகள்:))

M.Rishan Shareef said...

மிக அழகான கவிதை சினேகிதி.
ஒவ்வொரு வரியும் மஞ்சள் பூக்களையும் விடிகாலை இளமஞ்சள் வெயிலையும் மீட்டச் செய்கிறது.
இயற்கையோடு ஒன்றிய மனதின் பாடலை ஒலிக்கவிடாமல் எடுத்துவருவதாய்ச் சொல்லும் இக் கவிதையின் ஒவ்வொரு வரிகளும் அழகு.வாழ்த்துக்கள்!
தொடர்ந்து எழுதுங்கள் சினேகிதி :)

Sakthy said...

மிகவும் நன்றிகள் திவ்யா..
உங்கள் சமையலறையை இப்போது தான் எட்டிப் பார்தேன். வாய் ஊறுகிறது... செய்து பார்த்துவிட்டு சொல்லுகிறேன்

Sakthy said...

மிகவும் நன்றிகள் ரிஷான்..
உங்கள் கவிதைகளைப் போலவே உங்கள் விமர்சனங்களும் அழகு... நன்றிகள்..

Anonymous said...

முந்தைய கவிதையில் நகரத்தை வெறுத்து எழுதியிருந்தீர்கள்
இந்தக்கவிதையில் இயற்கையை இரசித்து எழுதியிருக்கிறீர்கள்..
தொடரட்டும் உங்கள் கவிதைகள்..

Sakthy said...

நன்றிகள் உங்கள் கருத்துக்கு..

ஜி said...

எந்த வரிய எடுத்து நல்லா இருக்குதுன்னு சொல்றதுன்னு தெரியல.. செமயா இருக்குது உங்க வார்த்தை விளையாட்டு :))

Sakthy said...

உங்கள் வாழ்த்து க்கு நன்றிகள் ஜி.
தொடர்ந்து வாருங்கள் தோழரே

Post a Comment