Thursday 8 May, 2008

எங்கிருக்கிறாய் நீ ?


எங்கிருக்கிறாய் நீ ?
எப்படி இருக்கிறாய் நீ?

ஒரே இடத்தில்
பக்கத்து வகுப்பறைகளில்
இருந்தபோதும் எத்தனையோ முறை
நேருக்குநேர் சந்தித்த போதும்
ஒருநாள் கூட
பேச முடிந்ததில்லை என்னால்
நீயும் கூடதான்
சிறு புன்னகையை வீசிவிட்டு
சென்றுவிடுவாய்-அதன்
அர்த்தம் புரியாமலேயே
கனவுகளில் மிதப்பேன்

உன் பெயர் கூட தெரியாமலேயே
எப்படி முடிந்தது உன்னை
ரசிக்க என்னால் -என்
நேசத்தை மட்டும்
சொல்ல முடியாமல்
எமை தடுத்தது எது..
இன்று வரை புரியவில்லை

வகுப்புக்குள் நுழைந்ததும்
உன்னை தேடும் என் கண்கள் உன்னை
கண்டபின்பு தானே
என் இருக்கை வரும்-நீ
எனை தேடும் நேரங்களையும்
அறிவேன் நான்!

இப்போது எங்கிருக்கிறாய் நீ
என தெரியாமலேயே
உன் நினைவுகளோடு நான்...
எப்படியிருக்கிறாய்
என் நேசத்திற்குரிய
உயிரே........

5 comments:

M.Rishan Shareef said...

அழகான கவிதை சக்தி..

இப்படி ஒவ்வொருக்குள்ளும் எவரோ ஒருவர் இருந்துகொண்டே இருக்கிறார் முற்றுப்பெறாத கவியாய்...
தூரிகை தொலைத்த பாதி ஒவியமாய்...

வாழ்த்துக்கள் சக்தி.
தொடர்ந்து எழுதுங்கள் சினேகிதி. :)

Sakthy said...

நன்றிகள் ரிஷான்......
தொடர்ந்து எதிர்பார்ப்பேன் உங்கள் விமர்சனத்தை..

Anonymous said...

superb poem... very nice

Anonymous said...

எனது டுயுசன் காலகாதலை
நினைவுபடுத்திவிட்டது
உங்கள் கவிதை
வாழ்த்துகள்
http://aathipansiva.blogspot.com/

Sakthy said...

நன்றிகள் சகோதரா

Post a Comment