Thursday 15 May, 2008

நிழல் தேடும் மனசு..

கோடைக்கால கதகதப்பில்
துவண்டு விழும் சருகுகளின் மேல்
உட்கார்ந்திருகிறது வெயில்..
புழுதி பறக்கும் தெருக்களில்
கானல்நீர் அங்கங்கே தலைகாட்ட
நிழல் தேடி அலைகிறது மனசு
கொங்கிறீட் காடுகளில்
பசுமரத்திற்கான தேடலோடு
பரபரக்கும் பார்வைதனை
என்ன சொல்லி ஆற்றிடுவேன்...


நவநாகரீக உலகத்தில்
இயற்கையை வென்று விட்டோம் என
செயற்கை குளிரூட்டியில்
இறுமார்ந்திருக்கும் மானிடனே
பாவம் அஃறிணை ஜீவன்களை
கொஞ்சம் நினைத்தாயா?

8 comments:

M.Rishan Shareef said...

அருமை சினேகிதி :)

Sakthy said...

நன்றிகள் தோழரே உங்கள் வாழ்த்துக்கு...

Anonymous said...

வெயிலின் வேதனையை
சொல்லியிருக்கிறீர்கள்
மானிடனின் இறுமாப்பையும்
சாடியுள்ளீர்கள்
நல்ல கவிதை

Sakthy said...

நன்றிகள்..

Divya said...

மானிடன் சிந்திக்க வேண்டிய கருத்து, அருமை!

Sakthy said...

நன்றிகள் திவ்யா..
சென்னை வெய்யிலில் எங்கே குளிர்பானக்கடையை என்று தேடி அலைவேன் நான்...அப்போது தான் தோன்றியது, மற்ற ஜீவன்கள் என்ன செய்யும் என்று, குளமோ, நீர் தேக்கங்களோ காண கிடைக்குதில்லை இப்போது...

ஜி said...

arumai Snehithi..

//கோடைக்கால கதகதப்பில்
துவண்டு விழும் சருகுகளின் மேல்
உட்கார்ந்திருகிறது வெயில்..
//

mihavum rasiththa varigal :)))

Sakthy said...

நன்றிகள் ஜி.

Post a Comment