Saturday, 23 February 2008

செவ்வானம் மையெழுத
வானம் முழுக்க
வெளிச்சம்
கலர் கலராய்..
நொடிக்கு நொடி
மாறும் உருவங்கள்
சின்ன கீற்றுக்களாய்...
தூரிகையின் சிதறல்களாய்
வண்ணப்புள்ளிகளின்
வர்ணயாலங்கள்....
ஓடி அலைந்து உருமாறி
கலைந்து போகும்
மேகக்கூட்டங்கள்...
நெருப்பு பந்தாய்
அந்தி சாயும் பகலவன்..
நிரை நிரையாய்
கூடு திரும்பும் புள்ளினங்கள்..
எத்தனை அழகை
தனக்குள் வைத்திருக்கிறது
இந்த இயற்கை.....

2 comments:

ஜி said...

//செவ்வானம் மையெழுத
//

rendu kavithaila ithe vaarthai pottirukeenga.. apdiina enna artham???

Sakthy said...

அந்தி சாயும் மாலை நேரத்தில் வானில் பல வித வர்ணங்களோடு அழகாய்காட்சியளிக்கும்..வானம் ரெட் கலரில் உள்ளதை "செவ்வானம்" என்டும் சொல்லாம்.

Post a Comment