
என் கனவுகளை
மொத்தமாய் உன்னிடம்
அடகு வைத்து நின்ற வேளையிலும்
உன் பார்வைக்காய்
கால் கடுக்கக் காத்திருந்தபோதினிலும்
உன் நேசம் எனக்கானதாயில்லை
என் ப்ரியம் சொல்லிக் காத்திருக்கையில்
என் மனக் கனவுகளை உதைத்தழித்தாய்
இப் பிரபஞ்சததைவிட அதிகமாய்
உனக்காய் நான் சேமித்ததெல்லாம் பறித்துக்
மொத்தமாய் உன்னிடம்
அடகு வைத்து நின்ற வேளையிலும்
உன் பார்வைக்காய்
கால் கடுக்கக் காத்திருந்தபோதினிலும்
உன் நேசம் எனக்கானதாயில்லை
என் ப்ரியம் சொல்லிக் காத்திருக்கையில்
என் மனக் கனவுகளை உதைத்தழித்தாய்
இப் பிரபஞ்சததைவிட அதிகமாய்
உனக்காய் நான் சேமித்ததெல்லாம் பறித்துக்
கேலி செய்து விலகிச் சென்றாய்
நிஜம் உறைக்க மெல்ல விழித்து
என் இதயச் சில்லுகளில் உன்
சுவடழித்து நிமிர்கையில்
சிரித்து நிற்கிறாய்
என் காதோரம் கிசுகிசுக்கிறது
உன் மூச்சுக்காற்று
'என் நேசம் உனக்கே தானென்று' .....
நான் நேசித்த ஜீவன்
காயப் படுத்தி விடக்கூடாதென்று
விலகி நடக்கிறேன்
தனித்து வந்த பாதையில்
வெகுதொலைவு கடந்தபின்
நானுணர்ந்த வலி
உனக்கும் வேண்டாமே
மீண்டும் நாம் சந்தித்தால்
நிதானமாய் நலம் விசாரிப்போம்
தத்தம் துணையோடு..
அதுவரை வாழ்ந்திடலாம்
நீ நீயாயும்
நான் நானாயும்..
9 comments:
கவிதை அருமை.
//நான் நேசித்த ஜீவன்
காயப் படுத்தி விடக்கூடாதென்று
விலகி நடக்கிறேன்
தனித்து வந்த பாதையில்
வெகுதொலைவு கடந்தபின்
நானுணர்ந்த வலி
உனக்கும் வேண்டாமே //
இந்த வரிகள் மிக அன்பையும் தான் கொண்ட உண்மையான நேசத்தையும் உணர்த்தவல்லன.
தொடர்ந்து எழுதுங்கள் ஸ்னேகிதி !
Its nice Miss Sakthy... There are different type of poet writing their own exp.as words or some may get it in naturally / some Imagine themself .. In this kind of poet u were.........
நன்றிகள் ரிஷான் ...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே
:)
நன்றிகள் ...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே
"என் கனவுகளை
மொத்தமாய் உன்னிடம்
அடகு வைத்து நின்ற "
"என் ப்ரியம் சொல்லிக் காத்திருக்கையில்
என் மனக் கனவுகளை உதைத்தழித்தாய்"
"இப் பிரபஞ்சததைவிட அதிகமாய்
உனக்காய் நான் சேமித்ததெல்லாம் பறித்துக் கேலி செய்து விலகிச் சென்றாய்"
"என் இதயச் சில்லுகளில் உன்
சுவடழித்து நிமிர்கையில்
சிரித்து நிற்கிறாய்"
அற்புதமாக வார்த்தைகள் கொண்டு
கவிதையை இளைத்து எடுத்திருக்கிறீர்கள்
எப்படி பாராட்டுவது...?
அதற்கு தகுதிதான் உண்டா எனக்கு??
இப்படியெல்லாம் அழகிய கவிதையை என்னால்
எழுதமுடியவில்லையே என்று மனதுக்குள்
பொறாமைப்படுகின்றேன்
அன்புடன்
ஆதிபன்
நன்றிகள் அண்ணா , உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ....
ஆனாலும் இது கொஞ்சம் ஓவரா இல்ல ......
ம் கொஞ்சம் நல்லாத்தான் கிடக்கு.. இப்போதைய என் மனநிலைக்கு கிட்டவாயிருப்பதால் சொல்கிறேன்..
நன்றிகள் அகிலன் .....
உங்களின் கவிதைகள் பார்த்தேன், 'தனிமையின் நிழல் குடை' . நண்பர் ரிஷானின் வலைப்பூவின் விமர்சனத்தில் .. அருமையாக உள்ளன.. வாழ்த்துக்கள்
//நான் நேசித்த ஜீவன்
காயப் படுத்தி விடக்கூடாதென்று
விலகி நடக்கிறேன்....
மீண்டும் நாம் சந்தித்தால்
நிதானமாய் நலம் விசாரிப்போம்
தத்தம் துணையோடு..
அதுவரை வாழ்ந்திடலாம்
நீ நீயாயும்
நான் நானாயும்..//
எத்தனை துாரம் சுற்றியே நடந்தாலும்
சுழற்சியின் பாதை சுயத்தையே தேடும்
காதல்
உயிர்கள் மீது மட்டுமல்ல
உடலோடும் அல்ல
உணர்வோடு வாழ்வது
மனிதம் உன்னில் வாழும் மட்டும்
காதல் உன்னையும் காதல் செய்யும்
அழகான பதிவு வாழ்த்துகள்
Post a Comment