Saturday 20 September, 2008

விடியலுக்காய் ..


சென்னை நகர நெருக்கடியில்
தீப்பெட்டி அடுக்குகளாய்
நிமிர்ந்து விட்ட
ஒரு ஜன்னல் ஓரத்தில்
ஈழவள் நானும்
தனிமையில்...

புளுதி படியும்
தெருவோர நியோன்
விளக்கு வெளிச்சத்திலும்
நாய்களின் சலசலப்பில்
தூக்கம் வர மறுத்த
இரவுகளோடு
என் நினைவுகளும்
எங்கேங்கோ
பயணிக்கும்...

ஞாபக முட்கள்
நெஞ்சை கிழிக்க
கடிவாளம் அற்ற
நினைவுகளோடு
ஜக்கியமாகின்றேன்....

கண்களில்
கசியும் நீரை
தென்றல் உலர்த்தி செல்ல
கடலோரக் காற்று
தேதி சொல்லும் நம்பிக்கையில்
உறக்கம் தழுவ
என்னையும் அறியாமல்
தூங்கிப் போகிறேன்
விடியலுக்காய் ..

4 comments:

ஆட்காட்டி said...

நாம எல்லோரும் இப்படிக் கவலைப் பட்டே சகலத்தையும் இழந்திருவோமோ என்ற பயம் எனக்கு பல நாட்களுக்கு முன்னமே உண்டாயிற்று.

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

விடியல்கள் எப்பொழுதும் தொலைவில் இல்லை.
ஒளிக்கீற்றுக்களைச் சேகரிக்கவே நாளொன்றில் இருள்கள் தோன்றுமெனக் கொள்வோம் ஸ்னேகிதி !

Sakthy said...

நன்றிகள் ஆட்காட்டி , உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் .

Sakthy said...

நன்றிகள் ரிஷான் . உண்மை தான் தோழரே ...
மிக அழகான பின்னூட்டம் ..
நம்பிக்கையை மட்டுமே நம்பிக் கொண்டிருப்போம் .....

Post a Comment