Sunday 17 August, 2008

இயற்கையின் ரகசியம் புரிந்துவிட்டால்......



ஆதி மனிதனின் முதல் தேடல் ...
ஆதாம் ஏவாளின் முதல் சந்திப்பு ...
கருவறைக் குழந்தையின் பூமியின் சிபரிஸம் ...
மழைத்துளி மண்ணிடம் பேசும் முதல் ரகசியம் ...
எங்கும் வியாபித்த கண்ணுக்கு தெரியா காற்று ...
எண்ணி எண்ணி தவறவிட்ட நட்சத்திரமற்ற வானம் ...
நீலக்கடலின் கடைசி விளிம்பு ...
மொட்டவிழ்க்கும் மலரின் முதல் சுகந்தம் ...
புல் நுனிக்கு பனித்துளி கிரீடம் வைக்கும் நொடி ...
தொலைந்து போன காதலின் மிள்சந்திப்பு ...
நீல வானின் மறு பக்கம் ...
வானவில் ஜாலத்தின் அரைவட்டம் ...
ஈருயிர் இணைந்து ஒரு உயிர் உருவாகும் அதிசயம் ...
மரணத்தின் நெடி அறிந்த மனிதனின் இறுதி நினைப்பு.. .
உயிர் கரைந்து காணாமல் போகும் மாயம் ...
முட்டி மோதி யுகம் தோறும் அலைகள் கரையிடம் பேசும் ரகசியம் ...
யுத்த சத்தற்ற உலகம்...
கலைந்து போன கனவு..

இத்தனைக்கும் விடை தெரிந்தால்
வாழ்க்கை எப்படி இருக்கும்?
ம்ம்ம்.....
என் காதுகளில் கிசுகிசுகிறது இயற்கை
"இயற்கையின் ரகசியம் புரிந்துவிட்டால்
வாழ்க்கையில் சுவரஸம் எது...? "

3 comments:

Anonymous said...

நீலக்கடலின் கடைசி விளிம்பு ...
மொட்டவிழ்க்கும் மலரின் முதல் சுகந்தம் ...
புல் நுனிக்கு பனித்துளி கிரீடம் வைக்கும் நொடி ...
தொலைந்து போன காதலின் மிள்சந்திப்பு ...
நீல வானின் மறு பக்கம் ...
வானவில் ஜாலத்தின் அரைவட்டம் ...
ஈருயிர் இணைந்து ஒரு உயிர் உருவாகும் அதிசயம் ...
மரணத்தின் நெடி அறிந்த மனிதனின் இறுதி நினைப்பு.. .

very nice

anbudan
aathi

Ramesh said...

தோழி,
கவிதை - சுவை.
பெண்களின் மனது, ஆண்களின் ஆதிக்கம், காதலின் உணர்வு, நட்பின் வலி, தாயின் அன்பு,
பாசத்தின் விலை / எல்லை /உறைவிடம், புகழின் போதை, பணத்தின் மாயை, இன்னும் பட்டியல் நீள்கிறது என்னிடம்...
இவை யாவும் சற்றே உணரத்தான் முடிகிறது.... என்ன செய்வது??

என்றும் அன்புடன்,
ரா. ரமேஷ்

Sakthy said...

உண்மை தான்..... இயற்கையின் படைப்புக்கள் நம் முன்னால் ......
எவ்வளவோ விடை தெரியா கேள்விகளுடன்,,,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே

Post a Comment