Saturday 9 August, 2008

நட்பு என்று சொல்லிக்கொண்டு....


வாழ்க்கைப்பாதையில்
அனைத்தையும் தொலைத்ததாய்
நினைத்துத்தனித்திருந்த வேளையில்
நீயாகவே வந்தாய்..
நட்பு என்னும் பெயரோடு..
நான் சாய்ந்து கொள்ளத்
தோள் தேடுகையில்
உன் மடியினையே தந்தாய்-இன்று
பல வேஷமிட்டு பொய் பரப்பிச்
செல்கிறாய்...

உன் வார்த்தைகளில் தேன் தடவி
மெல்லக் கொல்லும் விஷ
ஜாலத்தை எங்கு கற்றாய்?
சிரித்துச் செல்லுகிறாய் நித்தம்
பல்லிடுக்கில் வழிகிறது பொறாமை
உன் கண்கள்
சில நேரங்களில் காந்தமாயும்
பல நேரங்களில் படுகுழியாயும் மாற
சித்தம் கலங்கி
விழுந்து எழும்புகின்றேன்-ஆனாலும்
நன்றி தான் சொல்வேன் உனக்கு
பல பாடங்களைக் கற்று கொடுப்பதும் நீதான்!
நின்று நிதானித்து
மனிதனின் விகாரங்களைத் தவிர்த்து
முகமூடி வேஷங்கள் களைந்து
இந்த உலகின் நிஜத்தை அறிய
தெரிந்துவிட்டேன்
உன்னுடன் பழகிய நாளிலிருந்து...

உன்னை நேசித்து விட்டேன்
என் நட்பால்
உன் சுயம் அறியாமல்...
பிரிந்து செல்லும் வழி தெரியவில்லை
வெறுத்துத் தூக்கி எறியவும்
நீயே
கற்றுக் கொடுத்து சென்றுவிடு !

9 comments:

Unknown said...

போலி நட்பு ஒரு போதி மரம்.. அது பல பாடங்களைக் கற்றுத் தருகிறது. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஸ்னேகிதி..!

Sakthy said...

நன்றிகள் ரிஷான்.வருகைக்கும், கருத்திற்கும்.

Anonymous said...

உள்ளத்து காயங்களை
வார்த்தைகளில் அழகாக
வடித்துள்ளீர்கள்

உறுதியாகபேசும்
நீங்களுமா காயம்பட்டுள்ளீர்கள்?
ஆச்சரியமாக இருக்கிறது!


சரி..
இனிமேலாவது
உண்மையான உறவுகளை
இனம்கண்டுகொள்ளுங்கள்.

அண்ணன்
ஆதி

ஜியா said...

:(((

Sakthy said...

நன்றிகள் அண்ணா
வருகைக்கு.

Sakthy said...

நன்றிகள் ஜி
வருகைக்கு.

Anonymous said...

Hey really wonderful da Friends r god gift. Now You explained About Fake Friendship which is going In ur style.... Mudiyala da..

Ramesh said...

தோழி,
தவறாக என்ன விட்டால் ஒரு கேள்வி... நீங்கள் நேசித்த நட்பை வெறுத்து தூக்கி எறிய முற்பட்டதேன்? உங்கள் நட்பு உண்மை தானே. உங்களின் நட்பை நேசிக்க மறந்தவர் தான் வருந்த வேண்டும். வெறுத்து தூக்கி எறிய கற்றுக்கொள்ள முயளாதீர்கள்.

என்றும் அன்புடன்,
ரா ரமேஷ்

Sakthy said...

நட்பை மட்டுமே நான் கொடுக்கையில் எனக்கென கிடைப்பதென்னமோ தோல்வியும் ஏமாற்றமும் தான் , இப்படியே போனால் நம்பி நம்பி தோற்றுவிடுவேனோ என பயம் கூடவாயிருக்கலாம் ....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே

Post a Comment