Sunday 8 June, 2008

வாழ்கிறோம் நாமும்..


என் கனவுகளில்
நித்தம் 'செல்' விழும்
கிபீர் வரும்..
குண்டு விழுந்து வெடிக்கும்
உடல்கள் சிதற
குருதி தெறிக்கும்-பயத்துடன்
தூக்கம் கலையும்...
நிமிடங்களாய் நீளும்
நொடிகளில் உடல் உதறும்...
நான் வேறொரு தேசத்தில்
இருக்கின்றேன் என்பதை
நம்ப மறுக்கும்
நடுங்கும் மனது..

தாழ்வாய் பறக்கும்
விமானத்தை பார்க்கையில்
கிபீரும் புக்காரவும்
நினைவில் ஓடும்..
ஒருநொடி துடிக்க
மறுக்கும் இதயம்..
இத்தனை வலிகளிலும்
நாம் வாழ்ந்த நினைவுகள்
ஒரு கணம் வந்து போகும்
போரின் வடுக்கள்
அடிமனதில் பதிந்தபோது
எப்படி இனிக்கும்
அயல் நாடு வாழ்க்கை......

6 comments:

M.Rishan Shareef said...

யுத்தத்தின் வலிகளைச் சொல்லும் வரிகள் சக்தி.
அத்தனையும் நிஜம்.
என்னதான் வெளிநாடுகளில் சஞ்சரித்தாலும் தாய்நாட்டிலேயே உலா வரும் மனது.

அதன் ஆழங்களில் காயங்கள் மட்டுமேயானால் 'எப்படி இனிக்கும்
அயல் நாடு வாழ்க்கை......?'

வரிகள் அழகு சினேகிதி :)

Anonymous said...

எனக்குத்தான் இந்தப்பாதிப்பு என்றிருந்தேன்
உங்கள் மனநிலையும் ஒத்திருக்கிறதே

Sakthy said...

நன்றிகள் தோழரே..
நிஜம் தான். ஒவ்வொரு நொடியிலும் எம் நினைவுகள் அங்குதான் நிலைத்திருக்கின்றன...பிரிவின் கொடுமை கொடியது...
எதிரிக்கு கூட இந்நிலை வரக்கூடாது

Sakthy said...

உங்களுக்கும் எனக்கும் மட்டுமல்ல... போரினால் பாதிக்கபட்ட அனைவரின் நிலமை இப்படியாகத்தான் இருக்கும்.
நன்றிகள் உங்கள் வருகைக்கு....

ஜி said...

உங்களுடைய எல்லா கவிதைகளையும் வாசித்தேன்... ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க. வார்த்தை வளமும் நல்லா இருக்குது. புரியவே முடியாத அளவு இல்லாமலும், ரொம்ப எளிமையாயும் இல்லாம, சொல்ல வந்த கருத்த வாசகனுக்கு தெரியபடுத்துமளவுக்கு நல்ல நயம். தொடர்ந்து எழுதுங்கள்.... இன்னும் நெறய களத்தோடு கவிதைப் படைக்க வாழ்த்துக்கள் :)))

Sakthy said...

நன்றிகள் ஜி.
உங்கள் வாழ்த்துக்கள் என்னை ஊக்கப்படுத்தும்..
தொடர்ந்து வாருங்கள் தோழரே

Post a Comment