
சட சடத்தது கொட்டுகிறது மழை
மெல்ல இறங்கி நனைகின்றேன்
"பைத்தியம் மாதிரி நனையாதே"
உள்ளே வா என அதட்டுகிறது ஒரு குரல்
அவளுக்கு மழையில் நனைவது ரொம்ப பிடிக்கும்
என் சம்மதமின்றியே வருகிறது பின்னாலிருந்து
மழைக்கு மட்டுமே தெரியும்
என் முகம் தழுவிச் செல்லும் துளிகளில்
உப்பு கரிப்பதை ...
1 comment:
நல்ல கவிதை !
அருமையான வரிகள்.
//மழைக்கு மட்டுமே தெரியும்
என் முகம் தழுவிச் செல்லும் துளிகளில்
உப்பு கரிப்பதை ... //
'மழையில் இறங்கி நடக்கிறேன்..கண்ணீர்த்துளிகள் வெளித்தெரியாமல் இருப்பதற்காக ' எனும் வரிகளை நினைவூட்டுகின்றன இறுதிவரிகள்.
பாராட்டுக்கள் ஸ்னேகிதி !
Post a Comment